×
 

திமுக - பாஜக கூட்டணி? - டெல்லியில் நடக்கும் சதித்திட்டம்... உண்மையை போட்டுடைத்த தமிமுன் அன்சாரி...!

சட்டம்.ஒழுங்கையும் ஜனநாயகத்தையும் காக்கும் வகையில் மதம் ஜாதி தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்க கூடாது

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்வதற்காக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் சிதம்பர சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி  வருகை தந்தார். திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள ஒரு விடுதியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி வருகிறார். சட்டம்.ஒழுங்கையும் ஜனநாயகத்தையும் காக்கும் வகையில் மதம் ஜாதி தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டும். அவர் சாதி மதம் தொடர்பான எந்த வழக்குகள் அவர் விசாரிக்க சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். 

திருப்பரங்குன்றம் உட்பட பல்வேறு வழக்குகள் அவரிடமே போகிறது என்ற கேள்விக்கு,  அதுதான் எங்களுக்கு சந்தேகம் எழுப்புகிறது. நீதிமன்றம் என்பது ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் காப்பாற்றக்கூடிய ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு தொடர்ந்து அவர் சர்ச்சை கூறிய தீர்ப்பை கொடுப்பது 
மட்டுமல்ல சட்டம் ஒழுங்கை கெடுக்கக்கூடிய அளவு திட்டமிட்டு ஒரு பிரச்சனை உருவாக்க வேண்டும் தீர்ப்பை தருகிறார் எனவே தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அவரை பதவி நிற்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர்.  எனவே இதை அனுமதிக்க கூடாது.இது மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்.

தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என திமுக எங்களை எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தியேட்டர்களில் அலைமோதுவது போல் த.வெ.கவில் சேர பனையூர் பங்களா வாசலில் காத்திருக்கிறார்கள்

திமுக பாஜக கூட்டணி என்கிற கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது திமுகவை தனிமைப்படுத்த டெல்லியில் இருந்து சிலர் இதை பரப்புகிறார்கள் இது வெறும் வதந்தி தான் என்றார். 

இதையும் படிங்க: விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டி அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கொத்து, கொத்தாய் தவெகவிற்கு தவி வருகின்றனர். மற்றொருபுறம் திமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி பிடிக்க எங்களிடம் ஆலோசித்தது, நாங்கள் மறுத்துவிட்டோம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் குண்டைத்தூக்கிப் போட்டுள்ளன. இதனால் திமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு ஒவ்வொரு கட்சியாக தவெக பக்கம் சாய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்... உலகத்தையே உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கத்திற்கு இடையே அற்புதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share