சட்டப்போருக்கு தயாராகும் தமிழகம்..!! மேகதாதுவை தடுக்க புதிய நடுவர் மன்றமே தீர்வு..! தங்கம் தென்னரசு பேட்டி..!!
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
மேகதாது விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றும் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் எதிராக தான் செயல்படுகிறது என்று கூறியுள்ள அவர், மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தான் சரியாக இருக்கும் என்றார். மேகதாது விவகாரத்தில் ஆட்சேபனை இருந்தால் அப்போதே தெரிவித்து இருக்கலாம் என்றும் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கூறினார்.
மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியிருக்கிறோம் என்று கூறியுள்ள அவர், இதனால், காவிரி நீர் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இறுதி செய்திருக்கிற தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் இந்த கோரிக்கை தமிழ்நாடு மக்களின் நலனையும், காவிரி உரிமையையும் காக்கும் முடிவுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!
மேகதாது அணை பிரச்னையை, பெங்களூருக்கான குடிநீர் தேவையாகக் காட்டி தனியாகக் கொண்டு சென்று வெற்றி பெற கர்நாடகாவிற்கு அதிக வாய்ப்பு உருவாகிவிடும் என்று எச்சரித்தார். இதனைத் தடுத்து நிறுத்த, புதிய நடுவர் மன்றம் மூலமாக இந்த விவகாரத்தை தமிழ்நாடு எதிர்கொள்வதுதான் சாலச்சிறந்தது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!