×
 

நடுக்கடலில் பழுதாகி நின்ற படகு... சிறுவர்கள் எடுத்த விபரீத முடிவு... மீனவ கிராமத்தை சூழ்ந்த சோகம்...!

இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்வா, மனோஜ் ஆகிய இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா முத்து என்பவர் அது மகன் மனோஜ் உள்ளிட்ட 7 சிறுவர்கள் நேற்று பிற்பகல் ஒரு பைபர் படகில் கடலை சுற்றிவர திட்டமிட்டு பைபர் படகில் சென்றுள்ளனர் அப்பொழுது திடீரென படகு பழுதான நிலையில் படகில் இருந்த சிறுவர்கள் ஜோஸ்வா, மனோஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகியோர் கடலில் நீந்தி கரைக்கு சென்று விடலாம் என நினைத்து கடலில் குதித்து நீந்த துவங்கி உள்ளனர் 

இந்த நிலையில் படகிலிருந்த மீதமுள்ள மூன்று சிறுவர்களும் கரையில் இருந்த தனது தந்தைக்கு தகவல் கொடுத்து அவர்கள் உடனடியாக வேறு படகில் வந்து கடலில் நீந்திய இரண்டு சிறுவர்கள் மற்றும் படையில் இருந்த மூன்று பேர் என ஏழு பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். 

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் இன்று வெடிக்கும் நீட் விவகாரம்!! திமுக, காங்கிரஸ் அதிரடி நோட்டீஸ்... மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி!

 ஆனால் கடலில் குதித்து நீந்தி கரைக்கு வரமுயன்ற ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரும்  கடலில் மூழ்கியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து கரைக்கு வந்த சிறுவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகியோரை தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 படகுகளில் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர் மேலும் தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர் 

இதைத்தொடர்ந்து கடல் பகுதியில் சடலமாக ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உடலை தருவைக்குளம் மீனவர்கள் மீட்டனர் பின்னர் கரைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதன் காரணமாக தருவைகுளம் கடற்கரையில் ஏராளமான தருவை குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

இதையும் படிங்க: 100+ ஆபாச வீடியோக்கள்.. காமுக 'சைக்கோ' சிக்கியது எப்படி?... ஷாக்கான போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share