×
 

திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

மணமகன் வீட்டில், மணமகள் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு. கதவை உடைத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி காவல்துறை விசாரணை.

திருத்தணி அருகே வெள்ளி வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் வீட்டில், மணமகள் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு. கதவை உடைத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி காவல்துறை விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மணி, அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவருக்கும் ஆந்திர மாநிலம் நகரி அடுத்த சிந்தாலப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பட்டதாரிப் பெண் சந்தியாவை திருமணம் செய்ய இரு வீட்டார் சம்பந்தத்துடன் பத்திரிக்கை அழைப்புகள் விடுக்கப்பட்டன. அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சொந்தமான மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மணமகள் மற்றும் அவரது பெற்றோர், மணமகன் வீட்டில் புதன்கிழமை தங்கி உள்ளனர். வியாழன் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், காலையில் சந்தியா குளித்துவிட்டு வருகிறேன் என்று சென்றவர் குளியலறையில் வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனையடுத்து குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது அவர் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மணமகள் சந்தியா சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொதட்டூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு ஏற்பட்டு மணமகள் குளியலறையில் உயிரிழந்தாரா, திருமணத்தில் விருப்பமில்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகளின் சடலத்தில் காயங்கள் ஏதுமில்லாததால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு மணமகளின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் திருமணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி என குளியல் அறைக்கு சென்ற மணமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share