×
 

இதுதான் உங்க திராவிட மாடலா? அரசு அலுவலகத்திற்குள்ளே வைத்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்!!

தென்காசியில் அரசு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்குள் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து, அடிதடி, கொலை என அடாவடி செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளரை தாக்குவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது என குற்றச்செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுக்குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும் இதனை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அந்த வகையில் தென்காசியில் அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என பெருமையாக கூறிகொண்டு வரும் நிலையில் தென்காசியில் அரசு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்குள் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரில் உள்ள  சார்பதிவாளர் அலுவலகத்தில்  செல்லத்துரை என்பவர் சார்பதிவாளராக கடந்த ஆறு மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி!

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முநிஸ்பாண்டி, ஆயால்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதுரை ஆகியோர் உட்பட 3 பேர் பட்டா இல்லாமல்,  குறிப்பிட்ட ஒரு சொத்தை பதிவு செய்ய அவரை நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.  அதற்கு சார்பதிவாளர்  செல்லத்துரை உடன்படாததால் ஆத்திரம் அடைந்த முநிஸ்பாண்டி இன்று மதியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த  செல்லத்துரையை  சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில் காயம் அடைந்த செல்லத்துரை தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சார்பதிவாளர் செல்லத்துரையை அவர் தாக்கும் காட்சி அடங்கிய சிசிடிவி பதிவுகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.  இது குறித்து பனவடலிசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட முநிஸ்பாண்டி என்பவர் வழக்கறிகர் என்றும் கூறப்படுகிறது. பட்டப்பகலில் ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரி மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுதான் நடக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூடம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share