×
 
☰

வங்கக்கடலில் திடீர் மாற்றம்...!! - 200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்; கரை ஒதுங்கிய கடல் உயிரினங்கள்... எங்கு தெரியுமா?

சங்கு, சோவி, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கி காணப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது. 

வங்கக்கடலில் அர்ணாப் புயல் உருவாகும் நிலையில் பாம்பனில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியது. நாட்டுப் படகுகள் தரைதட்டி நிற்கின்றன. சங்கு,சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கி காணப்படுகின்றன. 

வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று நிலையில், அது இன்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக உருவாகிறது.

இதற்கு அர்னாப்  என பெயரிடப்பட உள்ளது. இது வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து நாளை தீவிர புயலாகவும் வலுவடைந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நாளை மறுநாள் கரையை கடக்க கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோல்?! அத்வானிக்கு குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?!

 இது போன்ற சூழல்களால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையோரத்திலேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் 200 மீட்டர் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்கின்றன. சங்கு, சோவி, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கி காணப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது. 

 பயல் அறிவிப்பு விடப்பட்டுள்ள நிலையில் கடல் உள்வாங்கியதால் மீனவர்களும், பாம்பன் பகுதி பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். புயல் காலங்களில் கடல் சில பகுதிகளில் சீற்றத்தோடு காணப்படும் நிலையில் பாம்பன் கடற் பகுதியில் கடல் உள்வாங்கி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்... தமிழகமே சர்ச்சையான விவகாரத்தில் வெடியை கொளுத்திப் போட்ட ஆர்.பி.உதயக்குமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share