×
 

ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!

ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்த போது நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்க நகை கொள்ளையடிக்கபட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக நகைகளை பறி கொடுத்த நபர் போலீசில் புகார் அளித்தார்.

உடனடியாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35 சவரன் நகை மீட்கப்பட்டது. கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜோஸ். கடந்த 16 ம் தேதி குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். நெல்லையில் உள்ள நகை கடைக்கு நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

எடுத்துச் சென்ற ஒன்றரை கிலோ தங்க நகை வைத்திருந்த பை குழித்துறை பகுதியில் வைத்து கொள்ளை போனது. இதனால் ஜோஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மிகுந்த பதற்றத்துடன் ஜோஸ் ரயில்வே போலீசில் நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். கொடுத்த புகாரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதை எடுத்து ஜோசிடம் இருந்து நகைகளை கொள்ளை அடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் வீட்டு கொள்ளையில் டுவிஸ்ட்.. மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட மருமகள்... ரகசிய காதலுடன் கைது...!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த அபுதாஹிர், டோலி, கோபகுமார், ஷர்புதீன், சித்திக் ஆகிய 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கைதான நபர்களிடமிருந்து 35 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்து 33,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு..! எல்லை மீறிய இளைஞர்... லாடம் கட்டிய போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share