பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?
தேனியில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து . நான்கு பேர்கள் காயம்
தேனியை சேர்ந்த பெண் மேல் சிகிச்சைக்காக தனது உறவினர்கள் இரண்டு பேருடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற கார் திடீரென ஆம்புலன்ஸ் முன்னே திரும்பியதால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் பாலத்தின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண் நோயாளி அவருடன் வந்த உறவினர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்டனர்.
தொடர்ந்து விபத்தில் சிக்கிய பெண் நோயாளி மற்றும் உறவினர்களை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வைகை ஆற்று பாலத்தின் தடுப்புகளை மோதி நின்றதால் பெரிய அசம்பாவிதமும் இன்றி சிறிய காயத்துடன் ஆம்புலன்சில் பயணித்த நோயாளி உட்பட நான்கு பேர்கள் தப்பித்தனர்.
இதையும் படிங்க: நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!
இந்த விபத்துக் குறித்து கானாவிளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் கவிழ்ந்து கிடக்கும் ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தினால் குன்னூர் ஆற்றுப்பாலத்தில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தென்னாபிரிக்கா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரி-மினி வேன்..!! 11 பேர் உயிரிழந்த சோகம்..!!