ஆபத்து... ஆபத்து...!! - இந்த பக்கம் வராதீங்க... முக்கிய மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!
போடி மெட்டு, குமுளி,கம்பம் மெட்டு மலைச்சாலை வழியாக தமிழகத்திலிருந்து வேலை கூலி ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு வலியுறுத்தினர்.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தமிழகத்திலிருந்து போடி மெட்டு மழைச்சாலை வழியாக தமிழக வேலை ஆட்களை ஏற்றி செல்ல வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்ததால் பரபரப்பு.
தமிழகத்தில் கேரளாவிலும் இரு தினங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்த நிலையில் தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான விவசாயக் கூலி வேலை ஆட்கள் ஜீப், கார், வேன்கள் மூலம் அதிகாலை 4 மணியிலிருந்து சென்று வந்தனர்.
தற்போது வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களில் மழை அலர்ட் அறிவித்தனர்.
இதையும் படிங்க: பொன்னி அரிசி வழங்குவதில் முறைகேடு..! எம்எல்ஏவிடம் வாக்குவாதம்..! கம்பத்தில் சலசலப்பு.!!
இந்த அறிவிப்பை ஏற்ற தேனி மாவட்ட ஆட்சியர் தமிழகப் பகுதியில் இருந்து போடி மெட்டு, குமுளி,கம்பம் மெட்டு மலைச்சாலை வழியாக தமிழகத்திலிருந்து வேலை கூலி ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில் மூன்று எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தேனி மாவட்டம் போடியில் இருந்து தினமும் இயக்கி வரும் நூற்றுக்கு மேற்பட்ட வேன் மற்றும் ஜீப்புகளை தடுத்து நிறுத்திய சோதனை சாவடி காவலர்கள் மலைக்குச் செல்ல வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பினர்.
மேலும் பேருந்துகளில் செல்லும் கூலியாக்களையும் இறக்கிவிட்டு அவர்களுக்கு டிக்கெட் பணத்தினை போக்குவரத்து துறையினர் திருப்பிக் கொடுத்தனர். இதனால் தமிழகத்தின்தேனி மாவட்டத்திலிருந்து கூலி வேலை ஆட்கள் கேரளாவிற்கு செல்லாமல் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
இதனால் முந்தல் சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதிகாலை 4 மணியிலிருந்து நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.இதனால் முந்தல் சோதனை சாவடியில் பரபரப்பு காணப்பட்டது
இதையும் படிங்க: செர்பியாவில் மாணவர்கள் புரட்சி! 10 ஆண்டுகால வுசிக் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!!