×
 

தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!

தென்காசி பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.

இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்பட்டது. 

இதையும் படிங்க: வேதனையா இருக்கு... தென்காசி பேருந்து விபத்து... மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஆணை...!

இந்த நிலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விரக்தியின் உச்சியில் இபிஎஸ்… பொய், துரோகம் தவிர வேற ஒன்னுமே இல்ல! பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share