×
 

தென்காசி விபத்தில் தாயைப் பறிகொடுத்த மாற்றுத்திறனாளி பெண்... அரசு வேலை வழங்கி உதவிக்கரம்...!

தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்தனர்.

இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்தது. 

இதையும் படிங்க: சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!

இந்த நிலையில், தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் DATA ENTRY பணிக்கான ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளார். தந்தையை ஏற்கெனவே இழந்த கீர்த்திகா, பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்து பரிதவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தென்காசி பேருந்து விபத்து... மனவேதனையின் உச்சம்... உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share