உரிமையை கொடுக்கலனா அடிச்சு புடுங்குவேன்..! பாமக வேட்பாளர் திலகபாமா ஆவேசம்..!
உரிமையை கொடுக்கலனா அடிச்சு புடுங்குவேன் என பாமக வேட்பாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சென்னை பெரம்பூர் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர்.திலகபாமா போட்டியிடுகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னம் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தனது பிரசாரத்தை பெரம்பூர் கிழக்கு பகுதி சத்தியமூர்த்தி நகர் மெக்கன்சிபுரத்தில் அமைந்துள்ள ஐம்பது ஆண்டுகள் பழமையான பியூலா கிறிஸ்தவ சபையில் போதகரிடம் ஆசிபெற்று தொடங்கினார். பின்னர் அருகில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் இரவு 7 மணிக்கு பேசுவதற்காக தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தால், திமுக சார்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு மாலை 5 மணிக்கே கூட தொடங்கினர். பாமக வேட்பாளர் திலகபாமா அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது, அங்கிருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறினர்.
பின்னர், அங்கு பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேச தொடங்கிய திலகபாமா, மழை வெள்ளம் வந்தபோது இங்கே வராமல் எங்கே சென்றார் சேகர்? என ஆர்.டி.சேகரை சுற்றி, சுற்றி தேடுவது போல் பாவனை செய்து பேசினார். மழைநீர் வடிகாலுக்கு நான்காயிரம் கோடி செலவுசெய்ததாக ஆண்டுதோறும் திமுக கூறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தோழர்களுக்கும், அந்த பக்கம் மதசார்பற்ற கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும் சேர்த்தும் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சியில் பெண் பிள்ளையை வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, போதை பொருள் புழக்கத்தால் ஆண் பிள்ளை வைத்திருப்பவர்களும் பயத்துடனே உள்ளனர்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! தபால் வாக்கு செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்..!!
நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் துண்டு சீட்டு எழுதி படிக்கும் முதல்வர் நமக்கு தேவையா?. தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டி வரும் மக்களுக்கும் வழங்கும் பணத்திலும் ஊழல் செய்கின்றனர் திமுக நிர்வாகிகள் என கடுமையாக விமர்சித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் திலகபாமா பேசிக்கொண்டிருந்த பிரசார வாகனத்தை சிறிது தூரம் நகர்த்தி செல்லுமாறு கூறினர், இதனால் டென்ஷனான திலகபாமா, “நான் அனுமதி பெற்று இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன், திமுககாரர்களை இங்கிருந்து போக சொல்லுங்கள், நான் 10 நிமிடம் இங்கு பேசுவேன், எதையும் சட்டபடி செய்பவள் திலகபாமா, என் உரிமையை கொடுக்கலைனா அடிச்சி புடுங்குவேன்” என ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!