மக்களே போகாதீங்க!... திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு... HIGH ALERT...!
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள இந்தப் பகுதி, அதன் கடற்கரைகள், கோவில்கள் மற்றும் பசுமையான மலைகளால் உலகப் புகழ்பெற்றது. இதன் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில், திற்பரப்பு அருவி ஒரு அற்புதமான இயற்கை ஆச்சரியமாகத் திகழ்கிறது. கோதையாறு எனும் ஆற்றின் பாதையில், பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்த இந்த நீர்வீழ்ச்சி, பயணிகளின் மனதை கவர்ந்து அமைதியும் உற்சாகமும் அளிக்கும் ஒரு இடமாக உள்ளது.
திற்பரப்பு எனும் சிறிய ஊரில் அமைந்த இந்த அருவி, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றுள்ளது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கொட்டி இறங்கும் நீர், கீழே உள்ள 300 அடி நீளமுள்ள பாறைப்பரப்பில் சீறிப் பாய்கிறது. ஆண்டு முழுவதும், குறிப்பாக பருவமழை காலத்தில் ஏழு மாதங்கள், இந்த அருவி அதிக நீர் வரத்துடன் ஆர்பரித்து நிற்கும்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியதால் அணைகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறப்பும் நிகழ்கிறது.
இதையும் படிங்க: நெருங்கும் மோன்தா CYCLONE... தப்புமா சென்னை?.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!
பேச்சுப் பாறை அணையில் இருந்து கோதை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கோதையாற்றி உபரி நீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேரூராட்சி நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்கப் போகுது மழை... உஷார் மக்களே! 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!