×
 

போலீசிடம் கம்பி நீட்டிய விசாரணை கைதி.! கண் அயர்ந்த நேரத்தில் தப்பியோடிய பலே கில்லாடி..!

திருச்செந்தூர் அருகே விசாரணை கைதி போலீசார் கண் அயர்ந்த நேரத்தில் தப்பியுள்ளார்.

திருச்செந்தூர் அருகே காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சற்று கண் அயர்ந்து தூங்கிய போது விசாரணை கைதி தப்பியுள்ளார். விசாரணை கைதி தப்பியதை அறிந்த அதிகாரிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

போலீசார் சற்று கண் அயர்ந்த நிலையில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பிச்சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதியான பன்னம்பாறையை சேர்ந்த தமிழரசன்(22) என்பவரை பிடித்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கைதியின் அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் கண்ணயர்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது கைதி அறையில் இருந்த தமிழரசன் அறையின் கதவைத் திறந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அதிகாரிகள் வந்து விசாரணைக்காக கைதி அழைத்து வரச் சொல்லும்போது திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆங்காங்கே தேடி வருகின்றனர். மேலும் எவ்வித தகவல் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. விசாரணை கைதி தப்பிய நிலையில் அவர் இப்போது பதுங்கி இருக்கும் இடம், குற்றச் சம்பவத்தில் எந்த விதமான தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம்?! களத்திற்கே சென்று எதிர்த்த விஜய்! முதல்வரானதும் எடுக்கும் முடிவு?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share