இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பாக அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் .
இந்தியாவில் நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை மோடி அரசாங்கம் 2019ல் கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் போராடியதன் காரணமாக அவற்றை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்தது என்று தெரிவித்தார். இப்போது பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதன் உற்சாகத்தில் அந்த நான்கு சட்டத் தொகுப்புகளையும் நடைமுறைப்படுத்துவதாக மோடி அரசு அறிவித்திருக்கிறது என கூறினார்.
தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்காக கோடிக்கணக்கான மக்களின் நலன்களை தாரை வார்க்கத் தயங்காத மோடி அரசாங்கம், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களை ரத்து செய்துவிட்டு முதலாளிகளுக்கு ஆதரவான சட்டத் தொகுப்புகளை இப்பொழுது நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு பாடை... போராட்டத்தில் குதித்த புதுவை காங்கிரஸ் கட்சியினர்...!
மோடி அரசு புதிதாக இயற்றியிருக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் எல்லாவிதமான பணிகளையும் ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவதற்கு இடமளிக்கிறது என்றும் நிரந்தரப் பணிகளே இனிமேல் இருக்காது என்ற நிலையை உருவாக்குகிறது எனவும் இது இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை நிறுத்தி வைக்குமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: "கொஞ்சம் கண்ணும் கருத்துமா பாருங்க அண்ணா..." - பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்...!