அதிமுகவை பாஜக WASHOUT பண்ணிடும்… நான் முட்டுக் குடுக்குறேனா? திருமா ஓபன் டாக்…!
திமுகவிற்கு முட்டு கொடுப்பதாக கூறப்படும் நிலையில் விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகள் மாறி இருக்கிறது. இந்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் பாஜக இணைந்து சந்திக்க உள்ளது.
பாஜக கட்சி கூட்டணி வைக்கும் மாநில கட்சிகளை அழித்துவிடும் என்று பலர் எச்சரித்து வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார். சகோதரத்துவத்துடன் தான் கூறுவதாகவும், அதிமுகவின் நலனுக்காகவே எச்சரிப்பதாகவும் திருமாவளவன் கூறியிருந்தார். திருமாவளவன் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திருமாவளவன் பேசியுள்ளார். அசுர பலத்துடன் இருக்கும் திமுகவிற்கு விசிக ஏன் முட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். சாய்கின்ற கட்சிக்கு தான் முட்டுக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் விமர்சித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கரியம், பெரியாரியத்தையும் பேசும் கட்சி என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அருமையான அறிவிப்பு... ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்... விசிக தலைவர் திருமா. வரவேற்பு...!
2026 தேர்தலில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வேண்டும் என்பதே பாஜகவின் அர்ஜெண்டா என்றும் தெரிவித்தார். அதனால் அதிமுகவை காலி செய்துவிட்டு இரண்டாம் இடத்தை பிடிக்க பாஜக முயல்வதாகவும் விமர்சித்துள்ளார். தமிழக அரசியல் திமுக vs அதிமுக என இருப்பது தமிழகத்திற்கு தேவை என்றும் தமிழக அரசியலை திமுக vs பாஜக என மாற்றி விடாதீர்கள் என்றும் பேசினார்.
இதையும் படிங்க: “திருப்பி அடிக்க எனக்கும் தெரியும் திருமா... இந்த மிரட்டுற வேலை எல்லாம் வேணாம்” - நேரடி சவால் விட்ட அண்ணாமலை...!