"SOFA பிரச்சனை"..! உதயநிதி விமர்சனத்திற்கு டாட் வைத்த திருமா..!
சோபா அரசியல் என்று முதல்வர் விஜய் குறித்து உதயநிதி விமர்சனம் செய்திருந்த நிலையில் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நேற்றைய சட்டமன்ற கூட்ட தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது சோபா அரசியல் என்ற விமர்சனம் செய்திருந்தார். புஷ்பா பட பாணியில் சோபா அரசியல் நடப்பதாக விமர்சித்தார். மேலும் பல்வேறு விமர்சனங்களை தமிழக வெற்றி கழகத்தின் அரசு மீது வைத்தார். சிறுபான்மை அரசை என்பதையும் குறிப்பிட்டார். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சரின் விஜய் வருவதற்கு முன்பு சோபா செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று புகார் தெரிவித்திருந்தார். அதனை சுட்டிக்காட்டி திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு ஏற்கனவே ஆர்டர் செய்த சோஃபா தான் வந்தது என்றும் கூறியுள்ளார்.
தான் முதலமைச்சர் ஆவதற்காக காத்திருந்ததைப் போன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒரு தரப்பினர் அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்று சந்தித்ததை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருப்பாரே தவிர, விசிக அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!
கருத்து கேட்டு ஆலோசித்து கடிதம் தயார் செய்வது என பல வேலைகள் இருந்ததால் தாமதம் நடைபெற்றது என்றும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் அரசின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கருத்துக்களை கூறியதாகவும் தெரிவித்தார். தன்னை முதலமைச்சர் ஆக்குவதற்கு வேலைகள் நடப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். அமைச்சரவையில் இடம் மற்றும் நிபந்தனையற்ற ஆதரவு உள்ளிட்டவற்றை நிர்வாகிகள் ஆலோசனைகளாக வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜோதிடத்தை நம்பினால் மதவாத அரசியலா..? முதல்வருக்கு திருமா. சப்போர்ட்..!