×
 

விஜய்க்கு ஆதரவா..? முடிவெடுக்கணும்..!! மறுக்காமல் நகர்ந்த திருமா.!

விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன.

இந்தத் தேர்தலின் முடிவு தொங்கு சட்டசபைw எனப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவமாகும். தொங்கு சட்டசபை என்பது, ஒரு மாநில சட்டமன்றத்தில் எந்த ஒரு தனிக்கட்சியோ அல்லது முன்கூட்டிய கூட்டணியோ ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறாத நிலையைக் குறிக்கும்.

தமிழ்நாடு சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இந்த எண்ணிக்கையை எந்தக் கட்சியும் எட்டாவிட்டால், அது தொங்கு சட்டசபை என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், அதிக இடங்களைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார். சிறிய கட்சிகள் அல்லது சுயேட்சைகளின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.

இதையும் படிங்க: சொன்ன மாதிரியே தொங்கு சட்டசபை வந்துடுச்சு..! விசிக தலைவர் திருமாவளவன் கருத்து..!

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எந்த முடிவு எடுத்தாலும் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தே முடிவெடுப்போம் என்று கூறினார். எதிர்காலத்திலும் முக்கிய முடிவுகளை கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தே முடிவெடுப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விஜய்க்கு ஆதரவளிப்பீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என திருமாவளவன் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை முடிவெடுக்கவில்லை என பதில் கூறி மட்டும் திருமாவளவன் நகர்ந்தார். 

இதையும் படிங்க: விஜய் ஆட்சி...? - மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share