×
 

பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

தொகுதி பங்கீட்டுக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

திமுக மற்றும் விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளித்தார். இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெறுவது என நேற்றைய விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என்று தோழர்கள் வலியுறுத்தியதாகவும் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறினார். எம்.பி சீட் குறித்து பேசி இருப்பதாகவும், திமுக தலைமை பரிசீலிப்பதாக கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். 23 கட்சிகள் உள்ள மெகா கூட்டணி என்பதால் கூட்டணி கட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு எட்டு தொகுதிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பட்டதாக கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதற்கு முதன்மையான காரணம் ஜனநாயக அரசியல் பாதுகாப்பு தான் என்றார். 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பணி புரிவோம் எனவும் தெரிவித்துள்ளார். விசிக நலனும், கூட்டணி நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு உடன்பாடு எட்டு பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: விசிகவிற்கு 8 தொகுதிகள்... முதல்வர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!!

திராவிட அரசியலுக்கு களமாடுகிறோம் என்ற பெயரில் சமூகநீதி அரசியலுக்கே வேட்டு வைக்க சில முயற்சிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். திமுக கூட்டணிகள் ஒதுக்கப்பட்டுள்ள எட்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 13 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை..! திமுக நிர்வாகியின் குரூர புத்தி..!! தட்டி தூக்கிய போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share