×
 

EPS- ஐ கிள்ளுக் கீரையாக நினைக்கிறது பாஜக.. தொகுதி பங்கீட்டில் இழுபறியா? திருமா. ஓபன் டாக்..!!

தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை என திருமாவளவன் கூறினார்.

திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீர்வு எட்டப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதி பங்கீட்டில் இறுதி முடிவு இன்னும் வரவில்லை. சொற்ப தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக திருமாவளவன் சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வேளச்சேரி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட விசிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் நான்கு நாட்கள் தலைமை அலுவலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பமான கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக டெல்லி தலைமை கிள்ளு கீரையாக நினைப்பதாக குற்றம் சாட்டினார். அதிமுக டெல்லியை தேடி செல்லும் நிலை உருவாகி இருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: விசிக-ன்னா அவ்வளவு இழக்காரமா?... திமுகவால் செம்ம அப்செட்டில் திருமா... தொண்டர்களிடம் வேதனையுடன் புலம்பல்...!

கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தாமதம் என்றே கூறலாம் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் வேல்முருகனிடம் பலமுறை பேசி இருப்பதாகவும் திமுக கூட்டணியில் அவர் தொடர்வது அவருக்கும் கூட்டணிக்கும் என்று அமையாத தேவை என்றும் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி நலனுக்கு எதிராக போகாது எனவும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட்?... அறிவாலயத்திற்கு குடைச்சல் தரும் திருமா... மூணு கன்டிஷன்களில் மொத்தமும் காலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share