அமைச்சரவையில் திருமா..? நிலைப்பாடு என்ன..? விசிக தலைவர் நச் பதில்..!!
அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்த நிலைப்பாட்டை திருமாவளவன் வெளிப்படுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியல் சூழலில் முக்கியமான தெளிவை அளித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடர்பான இடைத்தேர்தல் பேச்சுகளுக்கு மத்தியில், திருமாவளவன் திட்டவட்டமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
“திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் அமைச்சரவையில் இடம்பெற முடியும். அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதலமைச்சரிடமும் தெரிவித்துவிட்டேன்” என தெரிவித்தார்.
தவெக தலைமையிலான அரசு அமைக்கப்பட்ட பிறகு விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து பேச்சுகள் எழுந்தன. தவெக தரப்பில் இருந்து விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இதை பகிரங்கமாகவே தெரிவித்தனர். இருப்பினும், திருமாவளவன் தொடக்கத்திலேயே அமைச்சர் பதவிக்கு தனக்கு உடன்பாடு இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: விசிக-வில் இருந்து யார் வந்தாலும் வேண்டாம்!! அதிருப்தியாளர்களுக்கு தடை போட்ட மு.க.ஸ்டாலின்! கறார்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எழுந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன் தனது முடிவை அறிவித்துள்ளார். “100% உறுதியாக இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், தனது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, அரசியல் பொறுப்புகளைத் தொடர விரும்புவதாகத் தெரிகிறது. எம்எல்ஏ பதவி இல்லாமலும் அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “நீதிக்கான முக்கிய முன்னேற்றம்”..! சுர்ஜித் தாய் அதிரடி ARREST..!! திருமாவளவன் பாராட்டு..!!