×
 

திருமா கார் மோதிய சம்பவம்... முடியாத பிரச்சனை... இருதரப்புக்கும் போலீஸ் சம்மன்...!

வழக்கறிஞர் மீது திருமாவளவன் கார் மோதிய சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு இரு தரப்புக்கும் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் அருகே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு திருமாவளவன், தன் காரில் திரும்பி செல்லும்போது, முன் பகுதியில் ராஜீவ் காந்தி என்கிற வழக்கறிஞர் சென்றுள்ளார்.

திருமாவளவன் சென்ற கார் ராஜீவ் காந்தியின் இருசக்கர வாகனத்தில் உரசி உள்ளது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் பற்றி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

திருமாவளவனுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் முன்வைக்கப்பட்டு வந்தது. வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நீதி கேட்டு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திருமாவளவனின் கார் தான் வழக்கறிஞர் மீது மோதியதாகவும் வேண்டும் என்றே வழக்கறிஞரை தாக்கியதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதையும் படிங்க: 'STYLE ICON'.. தாய்லாந்த் ராணி சிரிகிட் கிடியாகரா காலமானார்..!! பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல்..!!

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் பற்றிய தலைவர் திருமாவளவன் கார் மோதியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருதரப்புக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் இன்று நேரில் ஆஜராக எஸ்பிளனேடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

இதையும் படிங்க: எல்லாம் ரெடி..! லொகேஷன் பாத்தாச்சு... கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share