ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு… எங்களுக்கும் வேணும்தான்..! திருமா. பரபரப்பு பேட்டி..!
ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு கோரும் விஷயத்தை மிகத் தீவிரமாக முன்வைத்து வருகின்றனர். இது இரு கட்சிகளுக்கும் இடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், கூட்டணி உடைந்துவிடும் அளவுக்கு இன்னும் சென்றடையவில்லை.
இந்தக் கோரிக்கை குறிப்பாக, மாணிக்கம் தாகூர் எம்பி போன்றவர்கள் பொதுவெளியில் பேசத் தொடங்கினர். அவர்கள் சொல்வது என்னவென்றால், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ரோபோக்கள் இல்லை, மனிதர்கள். தேர்தலில் கூட்டணிக்கு உழைத்து வெற்றி தேடித் தரும்போது, ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கு கிடைப்பது இயல்பானது, மரியாதைக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள் சிலரின் கருத்துக்கள் கட்சி மற்றும் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, ஆட்சியில் பங்கு கேட்பதற்கு காங்கிரசுக்கு உரிமை உண்டு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதிகாரக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் ஆனால் அதனை கைவிடவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி கலகலத்து போச்சு..! ஆடிப் போயிருக்கு... R.B. உதயகுமார் விமர்சனம்..!
ஆட்சியில் அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது என்று கூறினார். ஆட்சியில் பங்கு கேட்பதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று நம்புகிறார்கள் என்று தெரிவித்தார். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வலதுசாரிகளுக்கு வாய்ப்பு விடக்கூடாது என்றும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்றும் இருவரும் பேசி சமூக தீர்வு காண்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நயினார் திமுகவுக்கு விலை போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு... TVK நிர்மல்குமார் குற்றச்சாட்டு...!