பதில் உரை ஆற்றாத பிரதமர்... ஜனநாயகத்திற்கே தலைகுனிவு..! திருமாவளவன் கண்டனம்..!
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரை ஆற்றாதது தலைகுனிவு எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காதது தலைகுனிவு எனத் தெரிவித்தார். இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் தடுத்து ஒரு பதற்றத்தை உருவாக்கி ஆளுங்கட்சியினர் மட்டுமே கூடி தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாகவும் விமர்சித்தார். ஜனநாயகம் நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருவதாகவும் ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் இடையிலான உறவுகள் குறித்தும் இன்னும் பல பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவார்கள் என்பதால் தான் எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் தடுக்கும் யுத்தியை ஆளும் கட்சி கையாண்டதாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் பதில் உரை ஆற்றாத நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு தலைகுனிவு என்றும் இதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிச்சை எடுக்க கூட பயன்படாத மொழி தமிழ் என்று தனது காழ்புணர்வை கக்கி இருப்பதாகவும் இதுதான் பாஜகவினரின் மனநிலை என்றும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான மனநிலையை கொண்டவர்கள் இவர்கள் என்பதற்கு இதைவிட சான்ற தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழினமே கமல்ஹாசனை பாராட்டுது... பாஜககாரங்களுக்கு வயித்தெரிச்சல்...! திருமா. தாக்கு..!
நிர்மலா சீதாராமனுக்கு கமல்ஹாசன் பதிலடி தந்திருப்பதாகவும் அவருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் வானதி சீனிவாசன் போன்றவர்கள் வயிற்று எரிச்சலில் கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் தேவையா? திமுக எதிர்ப்பு! ஓட்டமெடுக்கும் திருமாவளவன்!