×
 

முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

முதலமைச்சர் விஜயை சந்தித்தது தொடர்பாக திருமாவளவன் பேட்டியளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே பயணிப்போம் என்று திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், அதன் மறுநாளே இந்த சந்திப்பு நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்திற்கு வந்தபோது, அமைச்சர் வன்னி அரசு அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடந்தது. நேற்றைய மாநாட்டில் விசிக ஆளுங்கட்சியாக வளர வேண்டும் என்றும், இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற ஆளுங்கட்சிகளுடன் கூட்டணி வைத்து வந்த நிலையில் இப்போது சகோதரர் விஜய் தலைமையிலான தவெகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் திருமாவளவன் உறுதியாகக் கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு உடனடியாக நடைபெற்ற இன்றைய சந்திப்பு, இரு கட்சிகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைக்க விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. விசிகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றனர். இந்நிலையில் தவெக தலைமையில் நீண்டகால கூட்டணியை உருவாக்க முதலமைச்சர் விஜய் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். நேற்றைய மாநாட்டில் திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பு அந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது. இரு தலைவர்களும் ஆலோசனை நடத்திய பின்னர் சந்திப்பு நிறைவடைந்தது. 

இதையும் படிங்க: முன்கூட்டியே முடிந்த விசிக மாநாடு.. மேடையில் டென்ஷனான திருமா..!! என்ன நடந்தது..??

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டை நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கியதாகவும் கூறியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு எப்போதும் உண்டு என்ற முதலமைச்சர் இடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும் அதனை வலுப்படுத்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேகமலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக திருமாவளவன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: தவிர்க்க முடியாத சக்தி.. தமிழக அரசியல் களத்தில் விசிக-தவெக இணைந்தே பயணிக்கும் - திருமாவளவன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share