திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? சரமாரி கேள்வி...!
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது என்ன மாதிரியான அணுகுமுறை என நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' எனப்படும் உயரமான கோபுரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்றுவது கோயில் நிர்வாகத்தின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. ஆனால், இந்த தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் அமைந்துள்ளதால், சில இஸ்லாமிய அமைப்புகள் இது தங்கள் மத இடத்தை அவமதிப்பதாக எதிர்த்து வந்தன. தீபத்துண் விவகாரத்தில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தீர்மான நோட்டீசை சபாநாயகர் இடம் வழங்கி இருக்கிறது. இந்த விவகாரம் மிக தீவிர பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றம் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சை, மாநில அரசு, நீதிமன்றம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலாக மாறியது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது என்ன மாதிரியான செயல் என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பிரிவினை அரசியல்... மதவெறி பரப்பும் சனாதன கும்பல்... விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்...
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி இந்த கேள்வியை எழுப்பி உள்ளார். சட்டம் ஒழுங்கு காரணத்தை சுட்டிக்காட்டி நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உரிய பதிலை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை செயலாளருக்கு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: தி.குன்றம் தீபம் வழக்கில் வக்கீலை வெளியேற்றிய நீதிபதிகள்!! மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!