திருப்பரங்குன்றம் திபம் விவகாரம்! மதுரை உயர்நீதி மன்றத்தில் காரசார விவாதம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்றும் (டிச.,16) காரசாரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் டிசம்பர் 16-ஆம் தேதி மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் கோயில், தர்கா, அரசு உள்ளிட்ட பல தரப்புகள் காரசாரமான வாதங்களை முன்வைத்தன.
ராம் ரவிகுமார் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் கோயில் நிர்வாகம் அதை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை இணை ஆணையர், தர்கா நிர்வாகம், தமிழக வக்ஃப் வாரியம் உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
விசாரணையின்போது வக்ஃப் வாரியம் தரப்பில் வழக்கறிஞர் முபீன் பேசுகையில், “தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது. கடந்த நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கு சமரச தீர்வுக்கு தயார்” என்றார்.
இதையும் படிங்க: திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள்!! திருப்பரங்குன்றம் விவகாரம்! பாஜக கடும் விமர்சனம்!
அரசு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், “மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே ராம் ரவிகுமார் மனுவில் கோரியுள்ளார். ஆனால் தனி நீதிபதி அதைத் தாண்டி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இப்பிரச்னையில் இந்தியா பற்றி எரிகிறது. தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்” என்று கூறினார்.
இந்தக் கருத்துக்கு ராம் ரவிகுமார் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. விசாரணை மதியம் தொடர்கிறது.
இந்த வழக்கு மதுரை பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற பாரம்பரிய உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! அது சர்வே கல் அல்ல! சமணர் கல்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு!