×
 

விடுதியில் இருந்து மாயமான 11ம் வகுப்பு மாணவன்... பள்ளியின் பூட்டப்பட்ட கிணற்றிற்குள் இருந்து சடலமாக மீட்பு...!

திருப்பத்தூர் அருகே 11ஆம் வகுப்பு மாணவன் முகிலன் மாயமான நிலையில், பள்ளி கிணற்றில் மிதந்த உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில்  தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் மாயமான  நிலையில் மர்மமான முறையில் பள்ளியில் இருக்கும் பூட்டப்பட்டிருந்த கிணற்றில் உயிரிழந்த விவகாரம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனைக்காக அனுமதித்த உறவினர்கள் முகிலனின் காலை பிடித்து கதறி அழுத தாய்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில்  தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன பெற்றோர்கள் எனது மகனை காணவில்லை என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் , இன்று அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். 

இதையும் படிங்க: சுத்தமா நம்பிக்கை இல்ல! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு... ஐகோர்ட் போட்ட தடாலடி உத்தரவு

இதனை அறிந்த பெற்றோர்கள் மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதுமட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் முகிலன்  சாவில் மர்மம் இருப்பதாக போராட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில் தடவியில் அறிவியல் வல்லுனர் பாலாஜி குழுவினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பிரேத பரிசோதனைக்கு காத்திருந்தனர். 

இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் அனுமதித்தினர். அப்போது வண்டியில் இருந்து இறக்கப்பட்ட முகிலனின் உடலைக் கண்டு  தாய் காலை பிடித்து  கதறிய அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.

இதையும் படிங்க: அரசு திட்டங்களில் முதல்வர் பெயருக்கு தடை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தமிழக அரசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share