×
 

தலையை சிதைத்து நர்ஸ் கொடூர கொலை.. சிசிடிவியால் சிக்கிய கணவன்..!

திருப்பூரில் தலை நசுக்கி செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை அருகே பூம்புகார் நகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் என்பதையும் தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளதையும் கண்டுபிடித்தனர்.

இதையும் படிங்க: சின்னம்மா இல்ல பெரியம்மா இல்லனு பேசுறது தான் உங்க கொள்கையா? அதிமுக மாஜி MLA-வை கிழித்த பாஜக நிர்வாகி..!

மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். அதனை வைத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்ததையும் தெரிந்து கொண்டனர். இதனை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்த நிலையில், கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் மதுரையை சேர்ந்த சித்ரா என்பதும் 20 நாட்களுக்கு முன்பு தான் அவர் வேலையில் சேர்ந்துள்ளதும்,கணவனை பிரிந்த சித்ரா குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாகவும் ராஜேஷ் கண்ணா தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு சித்ரா சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது.

சித்ராவுடன் ஒரு ஆண் தோளில் கையை போட்டுக்கொண்டு நடந்து சென்று வருகிறார். அந்த ஆண் சித்ராவின் கணவரா அவர்தான் கொலைக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் செவிலியர் சித்ராவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜகவுடனான கூட்டணியால் ரொம்ப வருத்தம்..! கண்ணீர் விட்டு அழுத அதிமுக நிர்வாகி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share