×
 

"விஜய் அண்ணா... கேக்குதா"..? என் மகனுக்கு என்னாச்சு..? நீதி கேட்டு கதறிய தாய்..!!

தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வர் விஜய்க்கு உயிரிழந்த மாணவனின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவன்   உயிரிழப்பு விவகாரத்தில் 5 மாதங்களாக நடவடிக்கை இல்லை என்று நீதி கேட்டு மாணவனின் தாய் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தண்ட கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த, முரளி மணிமேகலை தம்பதியின் 11 வயது மகன் தீபக் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார்.

கடந்த பிப்ரவரி 17ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தீபக் உணவு இடைவேளையின் போது, தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்கு திரும்பி உள்ளார். அப்போது திடீரென மூக்கில் நுரை தள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து தீபக்கின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைக்கு வந்த தீபக்கின் பெற்றோர், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் அவனை அடித்ததாலயே உயிர் இழந்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சைக்கு அழைத்து வருவதில் தாமதம் செய்துள்ளதாகவும், அதன் காரணமாகவே தனது மகன் உயிரிழந்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது வரை தனது மகன் இறப்புக்கான நீதி கிடைக்கவில்லை என்றும், தனது மகனை அடித்து கொன்றவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது மகன் இறப்பு தொடர்பாக மணிமேகலை தமிழக முதல்வருக்கு கேட்கவில்லையா என்று கேட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: திருப்பூர் அரசுப் பள்ளியில் 'One day HM'..!! மாணவர்களுக்காக சூப்பர் திட்டம்..!!

அதில், “விஜய் அண்ணா... இந்த குரல் உங்களுக்கு கண்டிப்பா கேக்கணும். ஏன்னா என் பையன் செத்து அஞ்சு மாசம் ஆச்சு. இன்னும் இந்த குரல் உங்களுக்கு கேக்கலையான்னு தெரியல எனக்கு. காது குடுத்து கேளுங்க. 12 வயசு பையன். அடிச்சு கொன்னுட்டாங்க. இந்த காது குடுத்து கொஞ்சம் கேட்டு என் பையனுக்கு என்னாச்சுன்னு கேளுங்க தயவுசெஞ்சு. சரிங்களா? இல்லைன்னா இந்த குடும்பம் இருக்கறதுக்கு ஒன்னும் இல்ல. ஏன் இந்த குடும்பம் இன்னு இருக்கணும்? ஒரு ஆண் வாரிசு போயிருச்சு. இந்த குடும்பம் இருக்கறதுல இன்னும் அர்த்தம் இல்ல. இன்னும் நீதி கிடைக்கலைன்னா அடுத்த இதுல கண்டிப்பா குடும்பத்தோட தீ கொளுத்தி சாவுறதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி” என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய் ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா?... மதுரை உளவுத்துறை காவலர் மீது கொலைவெறி தாக்குதல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share