300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!
300 மீட்டர் தூரத்திற்கு மக்களை தடை செய்து அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும்.
பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு. 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது. மீதமுள்ள 2 டன் அமோனியாவை 2 நாட்களில் டேங்கர் லாரியில் பாதுகாப்பாக எடுக்க திட்டம். 300 மீட்டர் தூரத்திற்கு மக்களை தடை செய்து அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும். தொழிற்சாலை பக்கம் யாரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா பேட்டி.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தொழிற்சாலை உரிமையாளர்கள் மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆலையில் உள்ள கடல் உணவு பொருட்கள் 4 நாட்களாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். கடல் உணவுகள் வைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகளில் அவர் ஆய்வு செய்தார். கடல் உணவுகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், அவற்றை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். பின்னர் மாசு கட்டுப்பாட்டு துறை, உணவு பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கடல் உணவுகளை பாதுகாப்பாக எடுப்பது குறித்தும், அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா, அமோனியா வாயு கசிவுக்கு பின் உள்ளே இருப்பவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், மக்களுக்கு அறிவித்து விட்டு அமோனியா வாயுவை பாதுகாப்பாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொழிற்சாலையில் 400 டன் கடல் உணவு இருந்த நிலையில் 300 டன் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 100 டன் இருப்பு உள்ளததாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு நாள் முழுவதும் அதனை திறந்து வைக்க வேண்டும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ள நிலையில், அமோனியா வாயுவை முழுவதுமாக பாதுகாப்பாக வெளியே எடுத்த பின்பு தான் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 300 மீட்டர் சுற்றளவில் யாரையும் அனுமதிக்காமல் தீயணைப்பு, மருத்துவம், காவல்துறை உதவியோடு முக்கியமாக செய்தியாளர்கள் வரக்கூடாது எனவும், பாதுகாப்பு உபகரணங்களுடன் டேங்கர் லாரியில் அமோனியா அப்புறப்படுத்தப்படும் எனவும், அமோனிய வாயு கசிந்த இடம் மூடப்பட்டுள்ளதாகவும், 2 டன் அமோனியா வாயு உள்ள நிலையில், அதனை டேங்கர் லாரி மூலம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் எனவும், அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழிற்சாலையில் விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், ஈர துணியை மூடி முகத்தை மூடி இருந்தாலே அமோனியா வாயு தாக்கம் இருக்காது என தொழில்நுட்ப வல்லுநர்கள கூறியதாகவும், தொழிற்சாலையில் சிறுமிகள் வேலை செய்தது தொடர்பான புகார் குறித்து ஆதார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும், பெயர் மாற்றி கூறியிருக்கலாம் ஆதார் மாறி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் அனைத்தும் பணிகளும் முடிக்கப்படும் எனவும், இன்னும் 2 நாட்களில் அமோனியா வாயு எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமோனியா கசிவு வேறு எங்கேயும் உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறிய பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!