×
 

18 உயிர்களை காவு வாங்கிய ஆலை..! அமோனியா அகற்றும் பணி தீவிரம்.. சீல் வைக்க நடவடிக்கை..!!

அமோனியா கசிவு ஏற்பட்ட ஆலையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக தொழிற்சாலையில் இருந்து சுமார் 400 டன் கடல் உணவுகள் பாதுகாப்பாக மாற்று சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய அமோனியா வாயுவை தொழிற்சாலையில் இருந்து அகற்றும் பணிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியுள்ளன. தொழிற்சாலை தொழில்நுட்ப வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசம் உடைகளுடன் அமோனியா வாயுவை டேங்கரில் அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிற்சாலையில் உள்ள அமோனியா டேங்கரில் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமோனியா வாயுவை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த பிரத்யேக வல்லுனர் குழுவினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை அமைந்துள்ள சாலையில் பேரி கார்டுகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் இயப்படுகின்றன.

இதையும் படிங்க: 18 உயிர்களை பலி வாங்கிய தொழிற்சாலை... அமோனியா அகற்றும் பணி தீவிரம்..!!

நிலை தொழிற்சாலை வாயிலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அம்மோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு ஆலைக்கு சீல் வைக்கப்பட உள்ளது. இறால் ஆலையில் 18 உயிர்கள் பலியான நிலையில், அம்மோனியா வாயுவை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: இனி OP வாங்க NO TENSION...! வந்தாச்சு நலம் Ai APP..!! அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share