×
 

பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

அமோனியா வாயு கசிவால் பல உயிர்கள் பறிபோன நிலையில் முதல்வர் விஜய்யிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இறால் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஜூன் 21 அன்று காலையில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஒடிஷா, அசாம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் ஆவர்.

தொழிற்சாலையில் சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது அம்மோனியா வாயு கசிந்தது. வாயுவை சுவாசித்ததால் பலர் மூச்சுத் திணறல், மயக்கம், கண் எரிச்சல், ரத்தம் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளானார்கள். சுமார் 70க்கும் மேற்பட்டோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். கவலைக்கிடமான நிலையில் இருந்த சிலர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

உயிரிழப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அரசு தரப்பில் முதலில் இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் உயிரிழந்தனர். சமீபத்திய தகவல்களின்படி உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்பது ஆக உயர்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட படைகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டன. வாயு பரவிய தொழிலாளர் தங்கும் இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில் சென்று தீவிர ஆய்வு!

தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பு பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலை செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் அம்மோனியா வாயு கசிந்து ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்த சம்பவத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு முதலமைச்சர் விஜய் இடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

இதையும் படிங்க: கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை! முதல்வர் விஜய் கறார்! நால்வரும் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share