ஐயா.. அவனை எங்க கிட்ட குடுங்க..! வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாய் கதறல்..!
தன் மகளை வன்கொடுமை செய்த குற்றவாளியை தங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சிறுமியின் தாய் கதறி அழுதது காண்போரை கழகச் செய்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 4 கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறுமி தற்போது நலமாக இருப்பதாகவும், குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து, 10 நாட்கள் ஆன நிலையில் இன்றுவரை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளியை நெருங்க முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்து அதிமுகவினர் 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கினர். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் எங்கள பார்த்த ஏமாளி மாதிரி தெரியுதா? - எகிறி அடித்த அமைச்சர் சிவசங்கர்...!
எங்களுக்கு நீதி பெற்ற தாருங்கள் என்றும் உங்களால் தண்டனை கொடுக்க முடியவில்லை என்றால் எங்களிடம் குற்றவாளியை ஒப்படைங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவனை என கூறி கதறி அழுதார். தங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறது என்று ஒரு நாளும் கவலைப்பட்டதே இல்லை என்று சிறுமியின் தாய் கூறி கலங்கியது வேதனையை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயி வேதனை எனக்கு நல்லா தெரியுங்க..! அதிமுக ஆட்சி அமைந்தால்.. மனம் திறந்த இபிஎஸ்..!