மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?
தீ மளமளவென வேகமாக பரவ துவங்கியதால் பேருந்து முழுவதும் எரிந்து சேதமானது.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து முற்றிலுமாக பேருந்து எரிந்து சேதம் தீ பற்றிய உடன் பேருந்து பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கியதால் பேருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து இன்று இரவு சுமார் 7 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
அப்போது பேருந்து வாகைகுளம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தில் ஆயில் டேங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்... நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி...!!
இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியபடி கீழே இறங்கி உள்ளனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவ துவங்கியதால் பேருந்து முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தில் எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீயை அணைக்கும் பணியில் விமான நிலைய தீயணைப்பு வாகனம் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு வாகனம் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.
பேருந்தில் தீப்பிடிக்க துவங்கியவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!