×
 

சகோதரி கண்முன்னே அண்ணனுக்கு நேர்ந்த கோரம்... கதற, கதற உயிருடன் இழுத்துச் சென்ற புலி...!

வனப்பகுதியில் மறைந்திருந்த புலி ஒன்று அவரது  சகோதரியின் கண்ணெதிரே  கூமன்  என்பவரை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. 

வயநாடு மாவட்டம் புல்பள்ளியில் பகுதியில்  விறகு சேகரிப்பதற்காக சென்றபோது சகோதரியின் கண்ணெதிரே   கூமன் (65) என்பவர்  புலித்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலம் வயநாடு  புல்பள்ளி  பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிக அளவில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் கூமன்  அவரது சகோதரி குள்ளி உடன் விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்பொழுது வனப்பகுதியில் மறைந்திருந்த புலி ஒன்று அவரது  சகோதரியின் கண்ணெதிரே  கூமன்  என்பவரை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரி கூச்சலிட்டுள்ளார். இதனை அடுத்து அருகில் விறகு சேகரித்து கொண்டிருந்த   மற்றவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர் தற்கொலை.. திமுக நஞ்சுக்கொடி பரவ விடக்கூடாது... நயினார் கடும் கண்டனம்...!

அப்பொழுது  அடர்ந்த புதர் நிறைந்த பகுதியில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு புலியானது தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக புல்பள்ளியை ஒட்டிய பண மரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே தெரிவித்த வந்த நிலையில் கேரளா வனத்துறையினர் அந்த புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் .

இன்று  பழங்குடியின முதியவரை தாக்கிய புலியால் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழல் நிலவு வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்  கேரளா வனத்துறை அமைச்சர்   கே.எஸ்.சசீந்திரன் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புலித்தாக்கி இருந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக வயநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் குழுக்களாக பிரிந்தும் அந்த புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .

இதையும் படிங்க: வேட்டி சட்டையில் அசத்தும் முதல்வர்... பொருநை அருங்காட்சியகம் குறித்து சிறப்பு வீடியோ வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share