×
 

களைக்கட்டப்போகும் திருச்செந்தூர் கும்பாபிஷேகம்... முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மாவட்ட எஸ்.பி....!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் வருகின்ற 7ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 

விழாவில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் திருச்செந்தூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 10 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்தாலும் அவர்களை பாதுகாப்பு வந்து செல்வதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

20 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு குடிநீர், அன்னதானம், கழிப்பறை வசதியுடன் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம், நகர்ப்பகுதியில் என ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. ட்ரோன்கள் மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட 20 பேட்ரோல் வாகனங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காக மருத்துவம், குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

கடற்கரையில் இருந்து தான் ராஜகோபுரத்தில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை பக்தர்கள் காண முடியும். அதற்காக கடற்கரையில் 20 பாக்ஸ் அமைக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்தில் குறைந்த எண்ணிக்கையில் தான் பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண முடியும். பக்தர்கள் சபாபதிபுரம் சாலை வழியாக மட்டுமே கடற்கரைக்கு சென்று வர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை செல்வதற்கு அனுமதி சீட்டு கிடையாது. சன்னதித்தெரு வழியாக செல்ல அனுமதியில்லை. கோயில் பிரகாரம் சுற்றி கடற்கரை செல்ல அனுமதியில்லை. 

ஜுலை 6ம் தேதி பிற்பகலுக்கு பிறகு போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். குடமுழுக்கு விழாவைக் காண 65 இடங்களில் எல்இடிவிக்கள் வைக்கப்படுகிறது. ட்ரோன்கள் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படும். பக்தர்கள் கூட்டத்துக்குள் நெருக்கியடித்து வருவதை தவிர்த்திட வேண்டும். 20 தனிப்படைகள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கூட்டத்தில் காணாமல் போகிறவர்கள், திருட்டு போன்றவற்றை தடுத்திடும் வகையில் 30 இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. 

கடற்கரையில் 3 ரோந்து படகுகளும், மீனவர்கள் படகுகள் மற்றும் கடலோர காவல் படை மற்றும் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக தனியாக ஆம்புலன்ஸ் வசதியும், வெளியே செல்வதற்கும் கிரீன் வேயும் அமைக்கப்படுகிறது. 

வருகைதரும் அனைத்து பக்தர்களுமே குடமுழுக்கு பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான தளத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து திருக்கோயில் நிர்வாகமே முடிவெடுக்கும். குடமுழுக்கு முடிந்த பிறகு பக்தர்கள் வெளியே செல்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்கள் ரதவீதி வழியாக பயணிக்கலாம். அன்னதானம் வழங்குவதற்கு உணவுப்பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share