இனி திருச்செந்தூர் கடற்கரையில் இதற்கு அனுமதியில்லை... கோயில் நிர்வாகம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் இரவு 8 மணிக்கு மேல் தங்க அனுமதி இல்லை. நீராடவும் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் மாலை மற்றும் இரவு நேரங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் இரவு தங்கி விட்டு மறுநாள் அதிகாலையில் முருகனை தரிசனம் செய்வார்கள்.
வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் 27ஆம் தேதி கோவில் முன்புள்ள கடற்கரையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப்... முதல் டார்க்கெட்டே சீனா தான்... அமெரிக்கா எடுத்த ராட்சத முடிவு...!
இதற்காக கோவில் முன்புள்ள கடற்கரை மணல் சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. எனவே கந்த சஷ்டி விழா நிறைவு பெறும் வரை கோவில் முன்புள்ள கடற்கரையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கோவில் முன்புள்ள கடலிலும் பக்தர்கள் இரவு நேரத்தில் நீராடுவதற்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதானால் கோவில் முன்புள்ள கடற்கரையில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளும் இரவு 8 மணிக்கு அப்புறப்படுத்தபட்டனர். இதனால் கோவில் கடற்கரை இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோவில் முன்புள்ள கடலில் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பக்தர்களை வெளியேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலானது இரவு நேரங்களில் ஒரு சில நேரங்களில் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மற்றொருபுறம் கடலானது உள்வாங்கி காணப்படுவதால் வெளியே தெரியக்கூடிய பாறையில் மேல் ஏறி நின்று ஆபத்தை உணராமல் பக்தர்கள் புகைப்படம் எடுத்து அமர்ந்து பொழுதுபோக்கை கழித்து வருகிறார்கள் இதனால் இரவு நேரங்களில் பக்தர்களுக்கு கடற்கரையில் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: குட்நியூஸ்... அக்.27ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்...!