திருமலா பால் மேலாளர் வழக்கு... என்னை மீறி விசாரணை நடந்து இருக்கு! சென்னை கமிஷனர் அருண் பரபர பேட்டி
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரண வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார். நவீன் மீது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிறுவன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். DC பாண்டியராஜன் இதனை விசாரித்து வந்ததாகவும், பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் நவீன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரண வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்தார். அப்போது, DC பாண்டியராஜனுக்கு விடுப்பு கொடுத்தது நான் தான்., அனுமதி பெற்று தான் விடுப்பு எடுத்ததாக கூறினார்.
இதுவரைக்கும் நடந்த விசாரணையில் திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளதாகவும், சிவில், பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் தன்னுடைய அனுமதி பெற்று தான் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். திருமலா பால் நிறுவனத்தில் என்ன நடந்தது என்று கோணத்தில் இன்னும் விசாரிக்கவில்லை எனக்கூறிய அவர், தற்கொலைக்கு தூண்டியதாக முகாந்திரம் இருந்தால் தான் அந்த கோணத்தில் விசாரிப்போம் என தெரிவித்தார். மேலாளர் நவீனை தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்த சென்னை காவல் ஆணையர் அருண், தனது அறிவுறுத்தலை மீறி 40 கோடி கையாடல் புகாரை DC பாண்டியராஜன் விசாரித்துள்ளார் என தெரிவித்தார். பாண்டியராஜன் தவறு செய்ததால் தான் துறை ரீதியாக விசாரணை நடத்தி இருக்கிறோம் என்றும் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மரணம் தற்கொலையாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கூறினார். திருமலா நிறுவனம் அளித்த புகாரில் 20 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என விளக்கம் அளித்த அவர், பண மோசடி சம்பந்தப்பட்ட புகார்களை முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!
இதையும் படிங்க: #BREAKING: அஜித் பிறப்புறுப்பில் கூட மிளகாய் பொடி... சித்திரவதை செய்து கொலை.... நீதிபதிகள் அதிர்ச்சி..!