×
 

திடீரென பரவிய புகைமூட்டம்... திணறிய பயணிகள்... வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு...!

நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பதற்றம் ஏற்பட்டது

நெல்லையிலிருந்து சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் 30 நிமிடம் காலதாமதமாக சென்னை வந்தடைந்தது. 

இன்று காலை 6:00 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணித்தவர்களுக்கு அச்சம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வழக்கமாக மதியம் 2:00 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடைய வேண்டிய இந்த அதிவேக ரயில், திண்டுக்கலை கடந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேல்வார்கோட்டை அருகே திடீரென ஏசி பெட்டியில் கோளாறு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ரயிலின் ஒரு ஏசி பெட்டியில் புகைமூட்டம் பறந்தது. புகை பரவியதைக் கண்ட பயணிகள் மிகவும் பதட்டமடைந்து அலறி ஓடினர். சிலர் பயந்து ரயிலை உடனடியாக நிறுத்த சொல்லும் வீடியோக்களும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக சவகாசம் கொலை நாசம்... இபிஎஸ் செய்யறது சரியே இல்ல! முத்தரசன் எச்சரிக்கை..!

ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்த கோளாறு ஏற்பட்டதால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தொழில்நுட்பக் குழுவால் ஏசி பழுதுபார்க்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு பழுது சரிசெய்யப்பட்டதும் ரயில் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டது.

இந்நிகழ்வால் பயணிகள் இடையே பெரும் பதட்டம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள், மூத்த குடிமக்கள் பயந்த நிலையில் காணப்பட்டனர். புகைமூட்டம் ஏற்பட்ட பெட்டியிலிருந்த பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தெற்குத் ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் எதிர்காலத்தில் இத்தகைய கோளாறுகள் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#JUSTIN | நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் அருகே வந்தபோது என்ஜினுக்குப் பின்னால் உள்ள பெட்டியின் கழிப்பறையிலிருந்து புகை வந்ததால் பரபரப்பு

இதற்கும் திண்டுக்கல் கலெக்டர் தான் காரணமோ??#TVKVijay‌ #EPS #DMKITWING pic.twitter.com/HYBnjKFW8g

— ERKS (@EliudRajkumar) July 9, 2025

 

இதையும் படிங்க: கேட் கீப்பர் மட்டுமே காரணமா? 13 பேருக்கு பறந்த சம்மன்.. தமிழகத்தைச் சேர்ந்தவர் கேட் கீப்பராக நியமனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share