திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10,500 ரூபாய் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்த தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 10 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ரூ 500 கட்டணத்தில் வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கும் டிக்கெட்டுகள் ஒதுக்கீட்டில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தற்போது தேவஸ்தானம் தினமும் 1,500 ஸ்ரீவானி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்குகிறது. இவற்றில் 500 டிக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் வழியாக முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் வெளியிடப்படுகின்றன. திருப்பதி விமான நிலையத்தில் நடப்பு முன்பதிவு ஒதுக்கீட்டின் அந்தந்த நாட்களுக்கு உண்டான 200 ஸ்ரீவானி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
தினசரி நடப்பு முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது ஆன்லைனில் வெளியிடப்படும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் ரூ.10,000 நன்கொடை அளித்து, தரிசன டிக்கெட்டுகளுக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ள நன்கொடையாளர்களுக்கு தினமும் 300 டிக்கெட்டுகளை ஒதுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... முக்கிய அதிகாரி செய்த பகீர் காரியங்கள்... ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை...!
மே 1, 2025 முதல் நன்கொடை வழங்கிய தகுதியுள்ள நன்கொடையாளர்களுக்கு இந்த வசதி பொருந்தும். இந்த டிக்கெட்டுகள் தினமும் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். மதியம் 1 மணிக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அதே நாளில் மாலை 4 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
மாற்றியமைக்கப்பட்ட முறை ஜூன் 10, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யப்படாமல் மீதமுள்ள டிக்கெட்டுகள் அந்தந்த நாட்களுக்கு முன்பதிவு ஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கப்படும். இந்த ஏற்பாடு மார்ச் 31, 2027 வரை அமலில் இருக்கும் என திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!