×
 

பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

திருப்பத்தூரில் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் முகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் இரண்டாவது நாளாக போராடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், லண்டன் மிஷன் ரோடு பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த, 11-ஆம் வகுப்பு மாணவன் முகிலன், அதே பள்ளியில் இயங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

 கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் மகனான முகிலனின் மர்மமான மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பள்ளி நிர்வாகம் முகிலனின் தந்தையை தொடர்பு கொண்டு, அவன் பள்ளிக்கு வரவில்லை என தகவல் தெரிவித்தது. இந்த தகவல் மாணவனின் குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: எங்களுக்கு நீதி வேண்டும்.. எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உறவினர்கள் மறியல் போராட்டம்..!

இந்நிலையில், இன்று காலை, முகிலன் பயின்று வந்த பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு வளையமிட்ட கிணற்றில் அவன் சடலமாக மிதப்பதைக் கண்டு, பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனது பெற்றோருக்கு தகவல் அளித்தது. 

இதையடுத்து, பெற்றோரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, முகிலனின் உடலை மீட்டனர்.முகிலனின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்திருப்பதாக அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். 

தனது மகனை அடித்து துன்புறுத்தியதாகவும், தினமும் மின்மோட்டாரை இயக்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாகவும் உயிரிழந்த மாணவன் முகிலனின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். சந்தேகத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவன் முகிலனின் மரணத்திற்கு காரணம் தெரியும் வரை, நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் நடத்தும் பேச்சு வார்த்தையையும் ஏற்க அவர்கள் மறுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share