×
 

#BREAKING திருப்பரங்குன்றம் மோதல் சம்பவம்... இந்து முன்னணி நிர்வாகி உட்பட 13 பேர் கைது...!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மோதலில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.  மலை உச்சத்தியில் தீபம் ஏற்ற வேண்டும் என 100 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்ற உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். 

அதை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். இல்லை என்றால் 6:05க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறநிலை துறை மீது பதியப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை தொடர்ந்து 6 மணி அளவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என அனைத்து பொதுமக்களும் எதிர்பார்த்து இருந்த நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல் ஏற்றப்படும்  தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதால் கொதித்தெழுந்த இந்து முன்னினர் மற்றும் பாஜகவினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மலை மீது ஏற முயன்ற 500க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். 

அப்போது காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், 2 காவலர்கள் காயமடைந்தனர்.  இதை தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து சிஆர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பி வைத்து அவர்கள் பாதுகாப்புடன்,  வழக்கு தொடரப்பட்ட நபர் உட்பட ஐந்து பேர் மற்றும் மலை மீது சென்று தீபம் ஏத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து காவல் துறையினர் 144 தடை உத்தரவை காரணம் காட்டி சிஆர்எப்எஸ் வீரர்களையும் இந்து அமைப்புகளையும் நலையில் செல்ல அனுமதிக்க முடியாது என மறுத்தனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டமானது கைவிடப்பட்டு, சிஆர்பிஎஃப் வீரர்களும், இந்து அமைப்பினரும் கலைந்து சென்றனர். 

இதையும் படிங்க: அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!! - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

இதனிடையே,  திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மோதலில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூணில் அறநிலைத்துறை தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் மலை மீதுள்ள தீபத் தூண் செல்ல பழனியாண்டவர் கோயில் வழியாக முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட மோதலில் இரு போலீசார் காயமடைந்தனர். இதனையடுத்துஇந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும்  அனுமதியின்றி கூடுதல் ,பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

இதையும் படிங்க: அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!! - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share