×
 

#BREAKING ”மறுபடியும் உத்தரவிட்டும் கேட்கலையா?” - தமிழக அரசின் தலையில் ஓங்கி கொட்டிய ஜி.ஆர்.சுவாமிநாதன்... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!  

அரசுத்தரப்பில் ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யும் வகையில் நீதிபதி ஜி.ஆர். சுப்பிரமணியன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை இன்று இரவு 7 மணிக்குள் ஏற்ற வேண்டும் என்றும், அதற்கான முழு பாதுகாப்பையும் வழங்க காவல் ஆணையருக்கு நீதிபதி நேரடியாக உத்தரவு வழங்கியிருந்தார். 

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும், பக்கதர்களும் திரளாக குவிய ஆரம்பித்தனர். இந்த சூழலில், நீதிபதி உத்தரவுக்கு பின் திருப்பரங்குன்றம் சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

மேலும், 144 தடை உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்து இருப்பதால் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இதனால், மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... “CISF வீரர்களை அழைத்ததில் தவறில்லை” - தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...!

இதனிடையே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து இரவு 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளதாக தனி நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். ஆனால் இரவில் வழக்கு விசாரணை இல்லை என்றும், மறுநாள் காலை (டிச.5) வழக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் சார்பில்  தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து இன்று காலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருப்பரங்குன்றம் மலை உச்சி மீது தீபம் ஏற்ற மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதி வழங்கும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட நீதிபதி சாமிநாதன், அரசுத்தரப்பில் ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மத்திய  தொழிற் பாதுகாப்பு படையை திருப்பரங்குன்றம் அனுப்பி அனுப்பி அங்கு என்ன நிலவரம் உள்ளது என்பதை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 


 

இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தில் பங்கு! 39 தொகுதிகள்!! ஸ்டாலினுக்கு ராகுல் எழுதிய ரகசிய கடிதம்! 3 நிபந்தனைகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share