×
 

கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

சென்னையைச் சேர்ந்த நபர் பணம் வாங்கிக்கொண்டு கடன் பெற்றுத் தராததால் ஆத்திரமடைந்த நபர் அவரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (58). இவர் ஆன்லைன் மூலம் வங்கிகளில் லோன் பெற்று தரும் பணியை மேற்கொண்டு வருகிறார். திருப்பூரைச்  சேர்ந்த தங்கப்பாண்டி  என்பவரிடம் கடன் பெற்று தருவதாக கூறி 3 லட்சம் பணம் பெற்றுள்ளார்m இதேபோல் அன்பு என்பவரிடமிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் இருவருக்கும் இதுவரை எந்தவிதமான கடனும் பெற்றுத் தரவில்லை.

கடன் தாமதமாகவே தங்கள் கொடுத்த பணத்தை அன்பு மற்றும் தங்கபாண்டி ஆகியோர் திருப்பி கேட்டுள்ளனர். இந்நிலையில் , ரமேஷ் குமார் அவிநாசி அருகே உள்ள ஹோட்டலில் தங்கிருப்பதாக தங்கப்பாண்டிக்கு (35)  தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தங்கப்பாண்டி தனது நண்பர்களான அன்பு (39) , இசக்கி ராஜா (24)  , ரஞ்சித் குமார் (28) முத்துக்குமார் (34) ஆகியோருடன் ரமேஷ் குமாரை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  5 பேரும் சேர்ந்து ரமேஷ் குமாரை தாக்கி காரில் திருப்பூர் அழைத்து வந்துள்ளனர். திருப்பூரில் செந்தாம்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார் பார்க்கிங் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அடைத்து வைத்து பணத்தைக் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

இந்த தகவல் ரமேஷ் குமாரின் நண்பர்களுக்கு தெரிய வரவே , அவர் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்தாம்பாளையம் பகுதியில் இருந்த ரமேஷ் குமாரை மீட்டு அவரை கடத்திச் சென்ற தங்கப்பாண்டி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share