×
 

சாதி, மத மோதல்களை ஏற்படுத்துவோரிடம் உஷாரா இருக்கனும்... பாஜகவை மறைமுகமாக சாடிய டிடிவி தினகரன்...!!

தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர்ந்து இயங்கி வருகிறது கடவுளின் பெயரால் ஒரு பிரச்சினையை கிளப்பி அமைதியாக வாழ்கின்ற மக்களிடையே ஜாதி மத சண்டைகளை உருவாகாமல் கவனமா இருக்கனும்.

சிவகங்கையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அதனை தான் நான் செயல்படுத்த முடியும். கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை தாண்டி இன்றும் உயிரோட்டத்தோடு இருக்கின்ற அரசியல் கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கியுள்ளனர்.

அமமுக யை தவிர்த்து விட்டு எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற அளவுக்கு உருவாக்கி உள்ளார்கள். தலைமை முடிவை எடுத்துவிட்டு தொண்டர்கள் மீது திணிக்கும் இயக்கமல்ல.இன்னும் ஒரு மாதம் ஆகட்டும் கூட்டணி குறித்து தெரிவிக்கிறேன் என்றார்

100 நாள் வேலை திட்டத்தின் மகாத்மா காந்தி பெயரிலே இருப்பது நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதே நேரத்தில் பாராட்டத்தக்க பல அம்சங்களும் உள்ளது. மாநில அரசு பல்வேறு நிதிநெருக்கடி உள்ள நிலையில் மாநிலத்தின் பங்கு 40% இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்

இதையும் படிங்க: யாருடன் கூட்டணி..? டைம் இருக்கு., ஆனா இது நடக்கும்… TTV தினகரன் ப்ளீச் பேச்சு…!

 மகாத்மா காந்தியின் பெயரிலே தொடர்ந்து நடத்தி இருக்கலாம் என்றார். SIR - யில் தகுதியான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால் அவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது.என்றார் 

 திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்சனை குறித்து கூறுகையில் பொதுவாக தமிழ்நாடு ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சகோதர மனபான்மையோடு தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

கடவுளின் பெயரால் ஒரு பிரச்சினையை கிளப்பி அமைதியாக வாழ்கின்ற மக்களிடையே ஜாதி மத சண்டைகளை உருவாக்காமல் இருக்கனும். என்றார். அதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கும் நீதிமன்றத்திற்கும் கடமை உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டது சரிதான் என்றார். தர்காவில் சந்தனக்கூடு ஆண்டுதோறும் நடக்கிறது.என்றார். இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் குழப்பம் எடுத்தாமல் நாம் எதுவும் சொல்வதற்கில்லை என்றார் . அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டை நாமே குழப்பத்தை உருவாக்கி தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி விடக்கூடாது என்பதற்காக நாம் அனைவரும் ஜாக்கிரதையாக இதனை கையாள வேண்டும் என்பது எனது கருத்து என்பதை .இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்ப்பு வழங்குவார்கள் எந்த ஒரு கட்சிக்கும் போட்டியிட உரிமை உள்ளது. தனியாகவோ கூட்டணியாகவோ போட்டியிடலாம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார். அமமுக இந்த தேர்தலில் இடம் பெறப் போகிற கூட்டணிதான் வெற்றி பெறும் அமமுக தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வோம்.  பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் போட்டியிட்டோம். சட்டமன்றத்திலும் போட்டியிட்டோம் கூட்டணி ஆட்சி உருவாகும் என்றார்.

இதையும் படிங்க: அசாமில் திருப்பதி ஏழுமலையான் கோவில்..!! வந்தாச்சு கிரீன் சிக்னல்..!! இத்தனை ஏக்கர் நிலம் ஒதுக்கீடா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share