கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!
இயற்கை வளங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜயை சந்தித்து டி.கே. பிரபு வாழ்த்து பெற்றார்.
தமிழக அமைச்சரவையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் டி.கே. பிரபு வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக மிகுந்த பெருமையுடன் அமைச்சர் பிரபு கருத்து தெரிவித்தார். இந்த உயர்ந்த பொறுப்பை வழங்கி, மக்கள் நலனுக்காக மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த்-க்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், கழகம் அளித்திருக்கும் பொறுப்பையும் முழுமையாக உணர்ந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, இந்த பொறுப்பிற்கு முழு நியாயம் செய்வேன் என உறுதிப்படத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்குவேன் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும், மக்களுக்கான சிறப்பான நல்லாட்சியை வழங்கவும் அயராது உழைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!
சட்டவிரோத குவாரி அமைத்தல், கனிம வளங்கள் கடத்தப்படுதல் மற்றும் இயற்கையை சுரண்டுதல் ஆகிய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். அதே வேளையில், முறையாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமலும் எடுக்கப்படும் கனிம வளங்கள் வாயிலாக, புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வழிவகை செய்யப்படும். சமூக நீதி, சமவாய்ப்பு மற்றும் உறுதியான மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையில் எங்களது மக்கள் பணி எவ்வித சமரசமுமின்றி நடைபெறும் என்றார்.
இதையும் படிங்க: எல்லா துறைகளிலும் முதல்வர் கவனம்..! தவெக புது வெர்ஷன்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!