×
 

மிகச்சிறந்த காமெடியன் விஜய்... முதல்வரை சீண்டியதால் டி கே எஸ் இளங்கோவன் பதிலடி...!

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சித்த விஜய்க்கு TKS இளங்கோவன் பதிலடி கொடுத்து உள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவை "தீய சக்தி", "டப்பா இஞ்சின்", "துருப்பிடித்த வியூகம்" போன்ற சொற்களால் தாக்கினார். எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிகளை ஒப்பிட்டு, எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி காலங்களை நினைவுகூர்ந்து திமுகவின் செயல்பாடுகளை கேலி செய்தார்.

"பவள விழா பாப்பா", "பழைய டப்பா" போன்ற வார்த்தைகளால் திமுகவை கிண்டல் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.கடந்த சில நாட்களாக அதிமுக குறித்து எந்த விமர்சனமும் முன்வைக்காத நிலையில், இன்றைய உரையில் அதிமுகவை நேரடியாக பெயரிட்டு குறிப்பிடாமல், ஆனால் தெளிவாக குறிவைத்து விமர்சித்தது கவனத்தை ஈர்த்தது.

2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை விவரிக்கும்போது, "மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்று பேசுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்படியே இருக்கட்டும்" என்று கூறிய விஜய், தவெகவை மாபெரும் மக்கள் சக்தி என்று விவரித்தார். பின்னர், நம்முடைய அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் மறுபக்கம், அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சீரிய திட்டங்களை செயல்படுத்திய முதல்வர்..! தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரம் தொடக்கம்..! TKS இளங்கோவன் அறிவிப்பு..!

இந்த வார்த்தைகளைச் சொன்னவுடன் தொண்டர்கள் ஆரவாரம் செய்து சிரித்தனர். முதலமைச்சரை தூக்கத்தில் எழுந்து எழுப்பி கேட்டால் கூட விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுவேன் என்று கூறுவார் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சரை விஜய் சீண்டிய நிலையில் அவருக்கு டி கே எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்து உள்ளார். விஜய் நல்லா காமெடியன் என்றும் திரைத்துறையில் ஹீரோ வாய்ப்பு போனாலும் காமெடியனாக வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக் கொள்கிறார் போல என்றும் தெரிவித்துள்ளார். விஜய் எப்போதும் நல்ல காமெடி செய்வதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: பாஜக தலைமையில் மற்றும் பலர்..! அதிமுக மீது விஜய் டைரக்ட் அட்டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share