×
 

அடுத்து தமிழ்நாட்டிலும் வெற்றி தான்... தமிழிசை சௌந்தரராஜன் சூளுரை...!

பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் வெற்றி அடைவோம் என தமிழிசை சௌந்தரராஜன் சூளுரைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார்.

இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தொடர்ந்து பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் பாஜக அரியணை ஏறுகிறது. இதனால் பாஜகவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

இதையும் படிங்க: செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்! விளாசிய நயினார் நாகேந்திரன்..!

இதனை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பீகார் தேர்தலில் பாஜகவின் வெற்றியை கொண்டாடி உள்ளார். பீகாரின் வெற்றி இன்று கட்சியினருடன் அமைதியான முறையில் வீட்டில் இனிப்பு வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார். டெல்லி குண்டுவெடிப்பினால் பெரிய கொண்டாட்டங்கள் வேண்டாம் என்ற கட்சியின் கட்டளைக்கு அடி பணிந்து மகிழ்ச்சியை அமைதியாகவே பகிர்ந்து கொண்டோம் என்று தெரிவித்தார். தமிழகத்திலும் நம் வெற்றிக்கு பாடுபடுவோம் என்ற என்று உறுதியுடன் சபதமேற்றோம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் அரியணை ஏறும் பாஜக... கூட்டுத் தலைமைக்கு கிடைத்த வெற்றி... பிரதமருக்கு EPS வாழ்த்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share