×
 

இனி தப்பு நடக்கவே கூடாது..! கிரிவலப் பாதையில் இரவு நேர ரோந்து... தி.மலை ஆட்சியர் உத்தரவு..!!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேர ரோந்து மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றிய 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதை உலகப் புகழ்பெற்ற புனித தலமாக விளங்குகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கானோர் இந்தப் பாதையில் வலம் வருகின்றனர். இரவு நேரங்களில் இந்தப் பாதையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் திருமதி. வந்தனா கார்க், காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் கிரிவலப் பாதையில் இரண்டு பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதைத் தடுக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இரவு நேரங்களில் நடை ரோந்து தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர்கள் பக்தர்களுடன் இணைந்து நடந்து செல்லும் வகையில் இந்த ரோந்துப் பணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு உடனடி உதவி கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். 

மாவட்ட எஸ்.பி. சுதாகர் தலைமையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. இரவு நேரங்களில் கிரிவலப் பாதையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்களை கண்காணிப்பது, பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த உத்தரவு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரிவலம் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் அச்சமின்றி தங்களது ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே மாவட்ட ஆட்சியரின் நோக்கமாகும். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?! போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share